நெடுந்தீவில் இருந்து ஹெலியில் எடுத்து செல்லப்பட்ட விடைத்தாள்கள்
யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவில் இருந்து உயர்தர பரீட்சை விடைத்தாள் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் எடுத்து வரப்பப்ட்டது.
பரீட்சை நிறைவடைந்ததும் தினமும் கடற்படை படகு மூலம் எடுத்துச் செல்லப்படுகின்ற விடைத்தாள் நேற்றைய தினம் புதன்கிழமை ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கடல் வழியாக எடுத்துச் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டமையால் விசேட உலங்கு வானூர்தி மூலம் எடுத்து செல்லப்பட்டது.
நெடுந்தீவு மகா வித்தியாலத்தில் உயர்தர பரீட்சை இடம்பெற்று வருகின்ற நிலையில் வித்தியாலய மைதானத்தில் உலங்கு வானூர்தி தரையிறக்கப்பட்டு விடைத்தாள் எடுத்துச்செல்லப்பட்டது.

Post a Comment