ரணில்:அம்மன் தரிசனம்?
நாட்டை விட்டு வெளியேற நீதிமன்ற தடை அமுலில் உள்ள நிலையில் ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் (21) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்கும் நோக்கில் அவர் சென்னை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அவருடன் இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமானும் வழிபாட்டில் கலந்துகொண்டிருந்தார்.

Post a Comment