தென்னிலங்கை மண்சரிவு:மரணம் 4!
தென்னிலங்கையில் வர்த்தக நிலையத்தின் மீது மண்மேடு சரிந்து விழுந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மேலும் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
கணேதென்ன சந்தியிலிருந்து கடுகண்ணாவ வரையிலான பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வாகனங்கள் ரம்புக்கனை-கலகெதர வழியாக கண்டி நோக்கிச் செல்ல வேண்டும் என்றும், கண்டியிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் இந்த மாற்றுப் பாதைகளில் செல்ல வேண்டும் என்றும் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

Post a Comment