மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரி கைது!
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் இயங்கிவந்த கசிப்பு வியாபார நிலையத்தை சுற்றிவளைத்தபோது, புதன்கிழமை (1) இரவு கசிப்பு வியாபாரி ஒருவர் 52 லீற்றர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இரவு தலைமையக பொலிஸ் நிலைய போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் கல்லடி நாகதம்பிரான் வீதியில் வீடொன்றினை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆண் வியாபாரி ஒருவரை கைது செய்ததுடன் 52 லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டவரை நேற்று வியாழக்கிழமை (2) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Post a Comment