முன்னாள் போராளிகளுடையதா?

 


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் மேற்கூரைப் பகுதியில் இருந்து ரி-56 ரக துப்பாக்கி உள்ளி;ட்ட ஆயுதங்கள் பல்கலைக்கழகத்தில் செயற்பட்ட போராளிகளதாக இருக்கலாமென சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்த காலத்தில் பல்கலைக்கழகத்தில் வைத்து இராணுவ புலனாய்வு பிரிவினால் கொல்லப்பட்ட போராளிகளதாவென்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

அப்பகுதியில் மேலும் ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முழுமையாக சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலக வளாகத்தின் கூரைப் பகுதியில் திருத்த வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நேற்று (30) இரண்டு மகசின்களும வயர்களும் முதலில் அடையாளம் காணப்பட்டன.

பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் காவல்துறை தெரியப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் மீட்கப்பட்ட ஆயுதங்களை சுற்றி வைக்க பயன்படுத்திய புதினப்பத்திரிகைகள் 2005ம் ஆண்டிற்குரியவையென தெரியவந்துள்ளது.அத்துடன் மீட்கப்பட்ட மருந்து பொருட்களும் அதே காலப்பகுதிக்குரியவையாக கண்டறியப்பட்டுள்ளன.

அதனால்   அக்காலப்பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கபட்டிருக்கலாமென  சந்தேகிக்கப்படுகின்றது.


No comments