ஜனாதிபதி:11.37 பில்லியன் - பாதுகாப்பு அமைச்சு 455 பில்லியன்?
ஜனாதிபதிக்கான செலவீனமாக ரூபா 11.37 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
இவ் ஆண்டுக்கு ரூபா 8.99 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டுக்கான அனுரா குமார திஸநாயக்காவிற்கான செலவீனம் 26.4 % ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது
அதே போல பாதுகாப்பு அமைச்சுக்கான செலவீனமாக ரூபா 455 பில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது இதற்கு மேலதிகமாக உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் செலவீனமாக ரூபா 193 பில்லியன் ஒதுக்கீடப்பட்டுள்ளது
அதனடிப்படையில் 2016 ஆம் ஆண்டுக்கான மொத்த பாதுகாப்பு செலவீனமாக ரூபா 648 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ் ஆண்டுடன் ஒப்பிடும் போது அடுத்த ஆண்டுக்கு 4.87 % அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
கல்வி அமைச்சுக்கு ரூபா 301 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அதே போல இணைக்கப்பட்ட சுகாதார மற்றும் ஊடக அமைச்சுகளுக்கு ரூபா 555 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
விவசாய அமைச்சுக்கு ரூபா 221.30 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சம நேரத்தில் கடற்தொழில் அமைச்சுக்கு ரூபா 10.60 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அதாவது சந்திரசேகரின் கடற்தொழில் அமைச்சுக்கு இவ் ஆண்டு ரூபா 11.64 ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஒதுக்கீடு 8.64 % ஆல் குறைக்கப்பட்டுள்ளது
புத்தசான அமைச்சுக்கு ரூபா 14.5 பில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ள நிலையில் புத்தசாசன திணைக்களத்திற்கு மட்டும் ரூபா 1.35 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
மிக விசேடமாக தொல்லியல் திணைக்களத்திற்கு ரூபா 2.65 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது தொல்லியல் திணைக்களத்திற்கு இந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 2026 ஆம் ஆண்டிற்கு 5.16 % அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
வடக்கு மாகாண சபைக்கு ரூபா 58.05 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மாகாண சபைக்கு ரூபா 69.93 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
Post a Comment