சங்குப்பிட்டி:கொலை செய்தே வீசப்பட்டுள்ளார்!

பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண் யாழ்ப்பாணம்- காரைநகர் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதானவர் என தெரியவந்துளளது 



அவரது சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி  முன்னிலையில் உடற்கூறாய்வுக்குட்படுத்தப்பட்ட போது, அந்த பெண் படுகொலை செய்யப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது.

அந்த பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்டுள்ளார்.

அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த பெண் வீட்டை விட்டு புறப்பட்ட போது, 10 பவுண் நகை அணிந்துள்ளார். அவரது சடலத்தில் நகைகள் காணப்பட்டிருக்கவில்லை.

அவர் வீட்டை விட்டு புறப்பட்ட போது, தனது நண்பியுடன் வவுனியா செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.



No comments