யாழில். 1240 கடலட்டைகளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் செல்லுபடியற்ற அனுமதி பத்திரத்துடன் , கடலட்டைகளை எடுத்து சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஆயிரத்து 240 கடலட்டைகளையும் , கடலட்டைகளை எடுத்து சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையினர் , பொலிஸ் விசேட அதிரடி படையினருடன் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வேலணை, துறையூர் பகுதியில் நேற்று முன்தினம் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த வாகனத்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
அதன் போது, செல்லுபடியற்ற அனுமதி பத்திரத்துடன் , சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட 1240 கடலட்டைகளை வாகனத்தில் எடுத்து செல்லப்படுவதனை கண்டறிந்து வாகனத்தில் பயணித்த அல்லைப்பிட்டி பகுதியை சேர்ந்த இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் , மீட்கப்பட்ட கடலட்டைகளையும் , அவற்றை எடுத்து சென்ற வாகனத்தையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்
Post a Comment