யாழில்.கடை உரிமையாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் - உரிமையாளர் உயிரிழப்பு ; இருவர் கைது


யாழ்ப்பாணத்தில் பல்பொருள் வாணிப நிலையத்தில் நிறை மது போதையில் சென்ற இருவர் உரிமையாளருடன் முரண்பட்டு , கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டதில் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். 

ஏழாலை கிழக்கை சேர்ந்த சிங்காரவேல் தனவன் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள பல்பொருள் வாணிப நிலையம் ஒன்றுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு நிறை போதையில் சென்ற இருவர் , மிக்ஸரை வாங்கியுள்ளனர். அதற்கான பணத்தினை உரிமையாளர் கேட்ட போது , அதனை கொடுக்க மறுத்து முரண்பட்டவர்கள்,  தமது உடைமையில் மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென எடுத்து , உரிமையாளர் மீது சரமாரியாக குத்தி , தாக்குதல் நடத்தியுள்ளனர் 

தாக்குதலை மேற்கொண்டவர்கள் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில் , படுகாயங்களுடன் இருந்தவரை அயலவர்கள் மீட்டு , தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளார். 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ,  சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக பொலிஸார் தாக்குதலாளிகள் இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


No comments