அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டு , பெற்றோல் குண்டு வீசி விட்டு தப்பி சென்றுள்ளது.
பத்தைமேனி பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் கதவுகளை உடைத்து திறக்க முயற்சித்துள்ளனர்.
வீட்டில் இருந்தோர் உட்பக்கமாக கதவுகளை மூடி விட்டு கூக்குரல் எழுப்ப தாக்குதலாளிகள் வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்ததுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment