வடகொரிய அதிபர் மகளுடன் சீனா வந்தடைந்தார்
சீனாவின் மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தனது மகள் கிம் ஜூ ஏயுடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு வந்தடைந்தார்.
இன்று புதன்கிழமை நடைபெறும் "வெற்றி நாள்" அணிவகுப்பில் அவர் சீனாவின் ஜி ஜின்பிங், ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் பிற உலகத் தலைவர்களுடன் அவரும் கலந்துகொள்கிறார்.
கிம் தனது மகளுடன் பெய்ஜிங் தொடருந்து நிலையத்தில் தனது கவச ரயிலில் இருந்து இறங்குவதை புகைப்படங்கள் காட்டின. தென் கொரியாவின் உளவு நிறுவனம் முன்னர் கிம்மின் பெரும்பாலும் வாரிசு என்று மகளைக் கூறியிருந்தது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜப்பானியர்கள் முறையாக சரணடைந்ததன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், ஜின்பிங் இந்த அணிவகுப்பை நடத்துகிறார்.
Post a Comment