போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய டிரோன்கள் சுட்டு வீழ்த்தியது போலந்து!
நேற்றிரவு உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலின் போது போலந்து வான்வெளியில் பல டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என போலந்து தெரிவித்தது.
போலந்து எல்லையை ஒட்டிய உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யப்படைகள் தாக்கியபோது போலந்து வான்வெளியில் அத்துமீறி நுழைந்த பல ரஷ்ய டிரோன்கள் சுட்டு வீழ்த்தியதாக போலந்து ஆயுதப்படைகள் கூறின.
குறிப்பாக போலந்து வான்வெளியில் 10க்கு மேற்பட்ட ட்ரோன்கள் ஊடுருசியதாகவும் அவை பாதுகாப்பு ஆபத்தை விளைவித்தவை என்பதால் அவை அழிக்கப்பட்டதாக போலந்து பாதுகாப்பு அமைச்சர் வ்லாடிஸ்லாவ் கோசினியாக்-காமிஸ் கூறினார்.
தற்போது போலந்து இராணுவம் மிக உயர்ந்த தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டது என போலந்து கூறுகிறது.
கிழக்கு போலந்தில் உள்ள சோஸ்னோவ்கா கிராமத்தில், பெலாரஸுடனான போலந்து எல்லைக்கு அருகில், சேதமடைந்த ட்ரோனின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
வார்சாவின் சோபின் விமான நிலையம் திறந்தே இருப்பதாகவும், ஆனால் தற்போதைக்கு விமான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்றும் கூறியது. அத்துடன்
மோட்லின், ரெசோவ்-ஜாசியோன்கா மற்றும் லுப்ளின் விமான நிலையங்களும் விமானங்களை நிறுத்தி வைத்தன.
பிரதமர் தலைமையில் இன்று புதன்கிழமை காலை 8 மணிக்கு அரசர அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டது.
Post a Comment