மஹிந்தவிற்கு இருக்க வீடில்லையாம்!

 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக கொழும்பில் வாடகைக்கு ஒரு புதிய வீட்டைத் தேடத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ சலுகைகளை பறிக்கும் ஒரு புதிய சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, வீடு தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனிடையே இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் உரிமைகள் இரத்துசெய்தல் சட்டமூல சான்றிதழை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஒப்புதல் அளித்துள்ளார். 

அதன்படி, சட்டமூலம் 2025 ஆம் ஆண்டின் 18 ஆம் எண் ஜனாதிபதி உரிமைகள் (ரத்து செய்தல்) சட்டமாக அமலுக்கு வரும்.

ஜனாதிபதியின் உரிமைகள் இரத்துசெய்தல் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் 150 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு வழங்கப்படும் ஏதேனும் வீடு அல்லது செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு, இரத்துச்செய்யப்படும்.

முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு செலுத்தப்படும் செயலாளருக்கான மாதாந்த கொடுப்பனவு மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வேறு சகலவசதிகள்  இரத்துச்செய்யப்படும்

முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு செலுத்தப்படும் மாதாந்தகொடுப்பனவு என்பன நிறுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments