நிமலராஜனை தெரியாதாம்:ஈபிடிபி!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமல்ராஜன் கொலை பற்றி ஏதும் தெரியாதென ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் பன்னீர் செல்வம் சிறீகாந் தெரிவித்துள்ளர்.
இன்று (10) யாழ் ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் ஊடகவியலாளர் நிமல்ராஜன் கொலை தொடர்பாக பார்ப்போமேயானால், அவர் 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார்.
2000 ஒக்டோபர் 10ஆம் திகதி வெளியாகிய சுடரொளி பத்திரிகையில் வெளியாகிய செய்தியில் நிமல்ராஜனுக்கு எந்த தரப்பினால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது என்பதும் அதற்கான காரணம் என்ன என்பதும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது.
ஈ.பி.டி.பி. கட்சிக்கும் நிமல்ராஜனுக்கும் முரண்பாடு இருப்பதாகவோ, நிமல்ராஜனுக்கு ஈ.பி.டிபி இனால் அச்சுறுத்தல் இருக்கின்றது என்றோ ஒரு சொல்லப்படவில்லை.
எமக்கு எதிரான தரப்புக்கள் எதிர்பார்ப்பது போன்று, தற்போதைய அரசியல் சூழலில் எமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வெளிப்படைத் தன்மையோடு நீதியான முறையில் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிப்படுகின்ற சூழல் உருவாக்கப்படுமாயின் எமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் இட்டுக்கட்டப்பட்ட பொய்கள் என்பது நிரூபிக்கப்படும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கின்றதெனவும் ஈபிடிபி அமைப்பின் ஊடகச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment