நேபாளத்தில் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் இராணுவத்தினர்!


நேபாளத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான வன்முறைப் போராட்டங்களில் தலைநகர் காத்மண்டுவில் பல அரச கட்டங்கள் தீவைக்கப்பட்டு சூறையாடப்பட்ட பின்னர் தற்போது இராணுவத்தினர் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை அறிவித்தது போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

இளைஞர்கள் தலைமையிலான போராட்டம் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் பதவி விலகலுக்கு வழிவகுத்ததை அடுத்து, இன்று புதன்கிழமை காத்மாண்டுவில் நாடாளுமன்றத்தையும் தெருக்களையும் நேபாள இராணுவத்தினர் காவல் காத்தனர்.

வன்முறையாக மாறிய போராட்டங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் தவறியதை அடுத்து, இராணுவம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தியதில் குறைந்தது 19 பேர் இறந்தனர் என்பதும் நினைவூட்டத்தக்கது.

No comments