ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மன்னார் மக்கள் போராட்டம்!

மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு

வருகின்றனர். 

மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 காற்றாலை மின் கோபுர வேலைத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்,

மன்னார் மாவட்டத்தில் கணிய மணல் அகழ்விற்கு எவ்வித அனுமதியும் வழங்கக்கூடாது, 

ஏற்கனவே மன்னார் மாவட்டத்தில் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் அசௌகரியங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே மக்களின் பிரச்சினைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஆகிய 3 கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுகளுக்கு எதிராக மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நேற்றுடன் 47 ஆவது நாட்களை கடந்துள்ளது. 

இந்நிலையில்  அரசாங்கத்தால் இதுவரை எவ்வித சாதகமான பதிலும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இன்று மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறித்த போராட்டத்தில் தென் பகுதியில் உள்ள சிங்கள சகோதரர்கள், மத தலைவர்கள், புத்திஜீவிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மன்னாரில் இருந்து வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

No comments