வலி. மேற்கு பிரதேச சபையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி


வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வலிக்காமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் தவிசாளர் ச.ஜயந்தன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது. 

இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரான சுபாஜினி, தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான கோரிக்கையை சபையில் முன்வைத்தார். அந்தக் கோரிக்கைக்கு அனைவரும் ஏக மனதாக சம்மதம் தெரிவித்த நிலையில் அஞ்சலி செலுத்துவதற்கு தவிசாளர் அனுமதி வழங்கினார்.

அதன் பின்னர் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தி, உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து ஈகைச்சுடர்கள் ஏற்றி தியாக தீபத்துக்கு உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது தேசிய மக்கள் சக்தி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

No comments