செம்மணியில் சுண்டுக்குளி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல்
1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு செம்மணி வளைவில் நடைபெற உள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைத்து வருகிறது.
நிகழ்ச்சி நிரல்:
காலை 9.00 – நினைவுச் சுடரேற்றல் மற்றும் மலர்வணக்கம்
காலை 9.30 – நினைவுப் பகிர்வு
காலை 10.00 – “வாசலிலே கிருசாந்தி” கவிதைத் தொகுப்பு வெளியீடு
காலை 10.30 – ஆவண காட்சிப்படுத்தல்
மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல் நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைக்கின்றார்கள்.
Post a Comment