தேசிய மக்கள் சக்தி பின்னடைவில்!
தென்னிலங்கையில் தேர்தல் அரசியல் களத்தில் தேசிய மக்கள் சக்தி தனது பின்னடைவுகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது.
அக்குறணை பிரதேச சபைக்கு இரண்டு சுயேச்சைக்குழுக்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள், இன்று 10 ஆம் தேதி முதல் தேசிய மக்கள் சக்திக்கான தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக மாதாந்திர பொதுக் கூட்டத்தில் தனித்தனியாக அறிவித்துள்ளனர்.
அக்குறணை பிரதேச சபையின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றபோது மூன்று உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் வேட்பாளரை ஆதரித்து, அதன் பின்னர் அவர்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து வருகின்றனர்.
இருப்பினும், நேற்று (10)நடைபெற்ற அக்குறணை பிரதேச சபையின் மாதாந்திர பொதுக் கூட்டத்தில், மூன்று உறுப்பினர்களும் தனித்தனி அறிக்கைகளை வெளியிட்டு, தேசிய மக்கள் சக்திக்கான தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.
Post a Comment