வரிசையில் வெளியேற்றம்?
தென்னிலங்கையில் முன்னாள்; ஜனாதிபதிகள் தமது சொகுசு பங்களாக்களிலிருந்து வெளியேற்றப்பட்டமை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது.
அவ்வகையில் மகிந்தவை தொடர்ந்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்சவும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களை விட்டு ஏற்கனவே வெளியேறியுள்ளனர்.
நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதிகளின் உரிமை ரத்து சட்டத்தின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகள் உத்தியோகபூர்வ இல்ல சலுகையை தற்போது அவர்கள் இழந்துள்ளனர்.கொழும்பில் உள்ள விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்று காலி செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது விதவைகள் மற்றும் ஓய்வு பெற்ற எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம், நேற்று நாடாளுமன்றத்தில் எந்த திருத்தங்களும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment