அடுத்து மகிந்த குடும்பமா?

 


இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, கார்ல்ட்ன் இல்லத்தில், புதன்கிழமை (24) சந்தித்துள்ளார்.

சந்திப்பில்,   இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும்  அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மாவட்ட நீதவானுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை கைது செய்ய உத்தரவிட்ட நீதவானுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின்  பொது செயலாளருரான  ரஞ்சித் மத்தும பண்டார,  ஜே .வி.பி. யின்  காட்டு நீதிமன்ற செயற்பாடுகளை நாங்கள் அறிவோம்.   அந்த நிலைமையை மீண்டும் ஏற்படுத்தவா இப்போது முயற்சிக்கின்றார்கள்  எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அனுர அரசு போதைப்பொருட்கள் மீட்புடன் பெருமளவிலான எதிர் தரப்பு பிரமுகர்களை உள்ளே தள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.    


No comments