மோதல் உச்சம்:போரட்டமில்லையாம்!



அனுர அரசுக்கும் இலங்கை மின்சார சபையின்  தொழிற்சங்கங்களிற்குமிடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது.

இதனிடையே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதில்லை எனவும், அதற்கு பதிலாக சட்டப்படி வேலை செய்யும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இன்றிரவு அறிவித்துள்ளன.

முன்னதாக தொழிற்சங்க போராட்டங்களையடுத்து இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்சாரம் சபை பொது முகாமையாளர் அறிவித்திருந்தார்.

மின்விநியோக சேவை இலங்கையில் அத்தியாவசிய சேவையாக வர்த்தமானி மூலம் ஜனாதிபதி அனுரதிசநாயக்கவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments