யாழில். ஹெரோயின் நுகர்ந்துகொண்டிருந்தவர்கள் ஊசிகளுடன் கைது


யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று இளைஞர்களை ,  போதைப்பொருளை நுகர்வதற்காக பயன்படுத்திய மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி ஹெரோயின் உள்ளிட்ட பொருட்களுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர் 

யாழ்ப்பாண நகர் பகுதியை அண்டிய பகுதியில் இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தை சுற்றி வளைத்து , போதைப்பொருளை நுகர்ந்துக்கொண்டிருந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் , மருத்துவ ஊசி, லைட்டர் , மேசைக்கரண்டி உள்ளிட்டவற்றையும் மீட்டுள்ளனர். 

அதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் , நல்லூர் மற்றும் அரியாலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 32 வயதான இருவரும் , 30 வயதான ஒருவரையுமே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments