அதானியிடம் பறித்து மன்னாரில் புதியவரகளிற்கு!



அதானியிடமிருந்து பறிக்கப்பட்டு வேறுமுதலீட்டாளர்களிற்கு வழங்கப்பட்ட மன்னார் காற்றாலை திட்டத்தை எதிர்ப்புக்கள் மத்தியில் முன்னெடுக்க இலங்கை ஜனாதிபதி அனுரதிசநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தித் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு அநுரகுமார திஸாநாயக்க இன்று பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 36 காற்றாலைகளுக்கு மேலதிகமாக, ஆரம்பிக்கப்பட்ட இரண்டு திட்டங்களுக்கான 14 காற்றாலை அமைக்கும் பணிகளை முன்னெடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே திட்டத்துக்கு எதிர்ப்புக்களையும், போராட்டங்களையும் போராட்டக்குழு தொடர்கின்றது.

திட்டம் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்க நிபுணர்கள் குழுவொன்றை இலங்கை ஜனாதிபதி அமைத்திருந்தார்.குழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கை ஜனாதிபதியின் பணிப்புரை வெளியாகியுள்ளது.

எனினும் கிளிநொச்சி பூநகரியில் திட்டமிடப்பட்டிருந்த 45 காற்றாலை திட்டம் தொடர்ந்தும் முடக்க நிலையிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments