கட்டுநாயக்கவில் கைதான இளைஞனிடம் தீவிர விசாரணை - யாழில் உள்ள வீடொன்றில் இருந்து கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான நிலையில் , அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வாள் ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த யாழ்பாணத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு தப்பியோட முயன்ற நிலையில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் சந்தேகநபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்றும் வாள் ஒன்றினையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

அந்நிலையில் சந்தேக நபரை தொடர்ந்து பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். 

No comments