கிளிநொச்சியில் கஞ்சா மீட்பு
கிளிநொச்சியில் கைவிடப்பட்ட வீடொன்றுக்கு அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த 18.5 கிலோ கேரளா கஞ்சா பொதிகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தர்மபுரம் பகுதியில் கிளிநொச்சி பொலிஸ் விசேட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட தீவிர சோதனையின் போதே, குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகள் தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment