மன்னாரில் தீப்பந்த போராட்டம்


மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் நேற்றைய தினம் இரவு தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில், இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 

அந்நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற  தீப்பந்த போராட்டத்தில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார், இளைஞர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




No comments