புதுக்குடியிருப்பு படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல்
புதுக்குடியிருப்பு படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
அதன் போது, படுகொலை செய்யப்பட்டவர்களின் இணைவாக கட்டப்பட்டுள்ள நினைவு தூபி முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் கடந்த 1990, செப்டம்பர் 21ஆம் திகதி இரவு இராணுவமும் இராணுவத்துடன் இணைந்த முஸ்லீம் ஊர்காவல் படையினரும், வீடுகளின் உறங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் 45 பேரை, தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென, கடற்கரை பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
விசாரணக்கென இவ்வாறு அழைத்துச் சென்றவர்களை நோக்கி இராணுவமும், ஊர்காவல் படையினரும் அவர்களை வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துள்ளனர்.
அதன் போது, 09, ஆண்களும் 08 பெண்களுமாக 17, பேர் படுகொலை செய்யப்பட்டனர். பலர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.
Post a Comment