விடுதியில் தங்கியிருந்த தம்பதியை இலக்கு வைத்து துப்பாக்கி சூடு - மூவர் தப்பியோட்டம்
வெல்லம்பிட்டி - கித்தம்பவ்ப பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
துப்பாக்கிச்சூட்டை நடத்திய மூன்று சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் எனவும் , அவர்களை தேடி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment