யாழில். வீடொன்றின் கூரையில் இருந்து தவறி விழுந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு


வீட்டு கூரை திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த போது , தவறி விழுந்து படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் , கோப்பாய் தெற்கை சேர்ந்த சந்திரசேகரம் பிரணவன் (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடொன்றின் , கூரையில் திருத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளை , கூரையில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார். 

படுகாயமடைந்தவரை மீட்டு , சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார் 

No comments