முப்படைகளும் கூலிப்படைகளில்!
தென்னிலங்கையில் கூலிக்கொலைகளில் இலங்கை முப்படைகளையும் சேர்ந்தவர்கள் ஈடுபடுகின்றமை அச்சத்தை சிங்களவர்களிடையே தோற்றுவித்துள்ளது.
சமீபத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் கைதாகியுள்ளார்.அவர் இலங்கை இராணுவத்தின் கொமோண்டோ படைப்பிரிவை சேர்ந்தவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொலையைச் செய்ய அவருக்கு பேரம்பேசப்பட்ட தொகை ஐந்து இலட்சம் ரூபாய்கள். ஒரு இலட்சத்தை முன்பணமாக பெற்று துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். மிகுதிப்பணமும் அவருக்கு வழங்கப்படவில்லை.
இன்று கூலிக்கு கொலையும் ஒரு தரப்பு உருவாகிக்கொண்டிருக்கின்றது. மிக இலகுவாக யாரும் இவர்களை அமர்த்தி கொலை செய்ய முடியும்.
இப்பொழுது பாதாள உலக மோதல் மற்றும் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பாக அதிகம் இடம்பெற்றாலும் நாளை இவர்கள் அரசியல் கொலைகளுக்கும் பயன்படுத்தப்படலாமென அவதானிகள் எச்சரித்துள்ளனர்.

Post a Comment