பெயர்பலகையில் தமிழ் தப்பிப்பிழைத்தது!



வவுனியா பல்கலைகழகத்தில் புதிய நூலகம் ஒன்றை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று  (02.08) திறந்து வைத்துள்ள நிலையில் பெயர் பலகையில் தமிழ் ஒருவாறாக முதலாவதாக வந்து தப்பித்துள்ளது. 

வடக்கிற்கு விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய  வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைகழகத்தின் புதிய நூலக கட்டிடத்தை உத்தியோக பூர்வமாக திறந்துவைத்தார். 

இதனிடையே பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடவோ, அல்லது அரசியலில் ஈடுபடுவதற்கோ எந்தத தடையும் இல்லை. இருப்பினும், வன்முறை அல்லது நாசவேலைகளை மேற்கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாது. அத்துடன் பல்கலைக்கழகங்களை வெறும் பட்டம் வழங்கும் அமைப்புகளாக அல்லாமல், ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் என பிரதமர் தெரிவித்திருந்தார். 

எனினும் முன்னுதாரணமாக தமிழர் பகுதி யெபர்பலகையில் தமிழ் முதலாவதாக இடம்பெற அனுமதித்தமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


No comments