சர்வதேச நீதி கோரும் முன்னாள்கள்!
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இரத்து செய்வதற்கும், எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கும் எதிராக ஐநூறுக்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பி.க்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஓய்வுபெற்ற எம்.பி.க்கள் சங்கம், ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணையத்திடம் ஒரு கடிதத்தையும் சமர்ப்பித்துள்ளது,
ஓய்வுபெற்ற எம்.பி.க்களில் பெரும்பாலானோர் நோய்வாய்ப்பட்டிருப்பதால், அவர்கள் வேலை செய்யவோ அல்லது தொழில் நடத்தவோ முடியாது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய சட்டங்களில் திருத்தம் செய்வதற்கும், இரண்டு புதிய வரைவு சட்டமூலங்களை தயாரிப்பதற்கும் அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இதற்கு பதிலளித்த ஓய்வுபெற்ற எம்.பி.க்கள் சங்கம், முன்னாள் எம்.பி.க்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது கூட கடினமாக இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இந்த ஓய்வூதியத்தை இரத்து செய்வது நியாயமற்றது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment