தமிழ் மக்களின் சாபக்கேடு!






வடக்கு கிழக்கில் இருக்கும் புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே இன்று தமிழ் தேசிய பரப்பின் உரித்தாளர்கள் எனக் கூறி கூட்டமைத்து போராடுகின்றனர், இது தமிழ் மக்களின் சாபக்கேடு எனத்தெரிவித்துள்ளார் சட்டத்தரணி வி.மணிவண்ணன்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (26) ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் தமிழ் மக்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுக்காது கும்பல் ஒன்று கூடி கலைந்துள்ளது.தம்மை தமிழ் தேசியப் பரப்பில் பயணிப்பவர்கள் என்று கூறி எதிர்வரும் 29ஆம் திகதியன்று கையெழுத்து போராட்டம் ஒன்றை மேற்கொள்ள அவர்கள் முயற்சிக்கின்றனர்.

எனினும் அவர்;களின் தேசியக் கொள்ளைக்கு எமது நிலைப்பாடு ஒத்துவராதென நினைத்திருக்கலாம்.

அவர்கள் கூட்டு என்ற போர்வையில் எதை சாதிக்க முயல்கின்றார்கள் என தெரியவில்லை. நேற்றையதினம் கூடிய கூட்டுக்குள் பல கட்சிகளின் பிரதிநிதிகள் இராணுவத்துடன் இணைந்து ஒட்டுக்குழுவாக பல்வேறு மோசமான செயற்பாடுகளை செய்தவர்கள் என்பதை மக்கள் அறிவர்.

அதன்படி அதில் உள்ள அவர்களில் சிலர் செம்மணி உள்ளிட்ட பல கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களாகவும் இருக்கும் நிலை உருவாகலாம். எனவே அவர்கள் முன்னெடுக்கும் போராட்டம் எந்தளவு வெளிப்படையானதாகவும் உணர்வூர்வமானதாகவும் இருக்கும் என்பது தெரியாது.

ஆனாலும் போராட்டத்தை முன்னெடுக்கும் தலைவர்கள் உண்மையானவர்களாக இல்லாது போனாலும் போராட்டம் அவசியமானது. அந்தவகையில் போராட்டத்தின் வலுவாக்கலுக்கு எமது கட்சியின் ஆதரவு என்றும் இருக்கும்” எனவும் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சம்பூர் பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட  காணியில் மேலும் மனித எச்சங்கள் இருக்கின்றனவா என்பதை ஆராய்வதற்காக தொல்பொருள் திணைக்களத்திடமுள்ள ஸ்கேன் இயந்திரம் மூலம் மேலும் ஆராய்வதற்கான உத்தேச செலவு மதிப்பீடு நேற்று(26) தொல்பொருள் திணைக்களம்,சட்ட வைத்திய அதிகாரி,காவல்துறை,காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஆகியவற்றின் கையொப்பத்துடன் மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில்; சமர்பிக்கப்பட்டுள்ளது.


No comments