மண்டைதீவில் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
முன்னதாக ஊர்காவற்துறை பகுதியில் மாலை ஆரம்பமான நிகழ்வுகளை தொடர்ந்து , அராலி சந்தி , மண்கும்பான் பிள்ளையார் கோவிலடி ஆகிய இடங்களில் நிகழ்வுகள் இடம்பெற்று , இரவு மண்டைதீவில் பிரதான நிகழ்வுகள் இடம்பெற்றன.
மண்டைதீவு பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களை மண்டைதீவு முதலாம் வட்டாரம் பகுதியில் உள்ள கிணறொன்றில் போடப்பட்டதாக கூறப்படும் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மூடப்பட்ட கிணற்றுக்கு முன்பாக பிரதான தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து , கிணற்றை சுற்றி தீபங்கள் ஏற்றப்பட்டு , மூடப்பட்ட கிணற்றின் மேல் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து , படுகொலை செய்யப்பட்டவர்களில் இருவரின் உருவ படங்கள் அவ்விடத்தில் வைக்கப்பட்டு , மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது
Post a Comment