செம்மணி 126!

 


செம்மணிப் பகுதியில் உள்ள இரண்டு பகுதிகளில் இருந்தும் இன்றைய தினம் (04) திங்கட்கிழமை புதிதாக 05 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 06 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடந்த 15 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில், 61 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன்போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 06 எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடனுமாக 126 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 135 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments