செம்மணிக்கு இந்திய காங்கிரஸ் நீதி வேண்டும்!
செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச காணிப்புடனான விசாரணைக்கு இந்தியா பரப்புரைசெய்யவேண்டும் என இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் என்பவர் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணியில் சமீபத்தில் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறித்த தமிழ்நாட்டின் வேதனையை தெரிவிக்கவிரும்புகின்றேன். மீட்கப்பட்ட மனித எச்சங்கள், இலங்கையின் தமிழ் சமூகத்தின் நீண்டகாயங்களை மீண்டும் கிளறியுள்ளன. அவை மோதல்களின் போது பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் என்று கருதப்படுகின்றது.
பல தசாப்தங்களாக இலங்கைத் தமிழர்கள் திட்டமிடப்பட்ட வன்முறைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் போன்றவற்றை எதிர்கொண்டுள்ளனர்.
அவர்களிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. மனித புதைகுழி என்பது வெறுமனே ஒரு தடயவியல் இடம்மாத்திரமில்லை. இது மறைக்கப்பட்ட உண்மை தாமதிக்கப்பட்ட நீதிக் கான ஒரு குறியீடு.
இந்திய அரசாங்கம் உடனடியாக இந்த விடயத்தை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக அணுக வேண்டும். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கத்திடமிருந்து முழுமையான வெளிப்படை தன்மையை கோர வேண்டும்.
செம்மணி மனித புதைகுழி குறித்து சுயாதீன சர்வதேச விசாரணைக்கு இந்தியா பரப்புரைசெய்யவேண்டும் .
இந்தியா வெறுமனே பிராந்திய ஒத்துழைப்பு குறித்து மாத்திரம் குரல்கொடுக்க முடியாது. எல்லைகளிற்கு அப்பால் தமிழ் மக்களின் கௌரவம் உண்மை நீதிக்காகவும் குரல் கொடுக்கவேண்டும் என சசிகாந்த் செந்தில் தெரிவித்துள்ளார்.
Post a Comment