முல்லைதீவில் சிங்கள கடல்!
முல்லைதீவில் சிங்கள குடியேற்றவாசிகளிற்காக மீன்பிடிகடலை அனுர அரசின் கடற்றொழில் அமைச்சு திறந்துவிட்டுள்ளது.
இதனிடையே முல்லைதீவின் கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொக்குத்தொடுவாய் கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திற்கு 300 மீற்றர் முன்பாக கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் நேற்று இரவு தொழிலுக்கு சென்ற இளைஞன் இன்று (08) அதிகாலை தொழில் முடித்து மோட்டார் சைக்கிளில் திரும்பிய போது கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சடலத்தை பார்வையிட்டு உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.
சம்பவத்தில் கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த ஜெயராஜ் சுபராஜ் என்ற 21 வயதுடைய இளைஞனே உயிரிழந்தவராவார்.
Post a Comment