மன்னாரில் காற்றாலை இடைநிறுத்தம்!

 


மக்களது எதிர்ப்பினையடுத்து மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.திட்டம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்குச் சகல தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அபிவிருத்தித் திட்டப் பணிகளை இடைநிறுத்துவதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை மின்னுற்பத்தித் திட்ட விவகாரம் தொடர்பில் இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சில் ஈடுபடுபதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டம் மற்றும் இல்மனைட் கனிய வளம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை விசேட கலந்துரையாடல் மின்சாரத்துறை அமைச்சர் அருண கருணாதிலக தலைமையில் இடம்பெற்றிருந்தது.

முன்னதாக உள்ளுர் மக்களது எதிர்ப்பினையடுத்து அதானி குழுமத்தின் காற்றாலை திட்டம் மன்னாரில் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments