கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் படுகொலை


முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் களப்பு கடலிற்கு தொழிலுக்கு சென்ற இளைஞன் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொக்குத்தொடுவாய் வடக்கினை சேர்ந்த ஜெயராஜ் சுபராஜ் (வயது 21) எனும் இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். 

கொக்குத்தொடுவாய் களப்பு கடலில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு தொழிலுக்கு சென்ற இளைஞன்  கொக்குதாெடுவாய் களப்பு கடலில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்தில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வேறு நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை தொழிலுக்கு வரும்போது குறித்த இளைஞன் வீதியில் வீழ்ந்து கிடப்பதை கண்டு அப்பகுதியில் யானை நடமாட்டம் அதிகமாகையால் யானை அடித்து விட்டதோ என நினைத்து குறித்த இளைஞனின் தந்தையையும், கிராம அபிவிருத்தி சங்க தலைவரையும்  கூட்டி சென்று பார்த்த போதே இளைஞனின் உடலில் வெட்டுக் காயங்கள் இருந்தது தெரியவந்ததுள்ளது.

பின்னர் கொக்குளாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 

படுகொலை செய்யப்பட்ட இளைஞன் சிறந்த மரதனோட்ட வீரனாவார். வடமாகாணத்தில் பல சாதனைகளை கடந்த காலங்களில் பெற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments