ராஜிதவை தேடி வேட்டை!
முன்னாள் அமைச்சர்களை அனுர அரசு தொடர்ந்தும் வேட்டையாடிவரும் நிலையில் அடுத்து ராஜித சேனாரத்னவை கைது செய்வதில் முனைப்பினை காண்பித்துவருகின்றது.
இந்நிலையில் ராஜித சேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வதில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கைது தொடர்பாக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இருந்த பல இடங்களில் அவரைக் கைது செய்ய சமீபத்திய நாட்களில் சோதனை நடத்தப்பட்டாலும், அவரைக் கைது செய்ய முடியவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே ராஜித சேனாரத்னவைக் கைது செய்ய நீதிமன்றத்தால் சமீபத்தில் ஒரு பிடிவிறாந்து பிறப்பிக்கப்படடுள்ளது.
முன்னதாக, முன்னாள் காவல்துறை அதிபர் தேசபந்து தென்னகோனைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் அவரது சொத்துக்களும் பறிமுதல் செய்யத் தயாரானபோது அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ராஜித சேனாரத்னவை இலக்கு வைத்து அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment