திருகோணமலை இந்தியாவிற்கு:சிங்களவர்கள் எதிர்ப்பு!



திருகோணமலையில் விவசாய நிலங்களை இந்திய நிறுவனங்களிற்கு தாரை வார்க்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு மூண்டுள்ளது.

அவ்வகையில்  தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன நிலங்களை ஆக்கிரமிப்பதற்கும் எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை முத்துநகர் பகுதியில் உள்ள 600 ஏக்கர் தமிழ் மக்களிற்கு சொந்தமான நெல் நிலம் இந்திய நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படுவதை நிறுத்தவும், வன நிலங்களை ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பை வலியுறுத்தியும் போராட்டக்காரர்கள் பதாகைகளை ஏந்தி போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். 

இதனிடையே போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் செயற்பாட்டாளர்களான வசந்த முதலிகே மற்றும் லஹிரு வீரசேகர ஆகியோர் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே ஒரு மூத்த காவல்துறை அதிகாரியுடன் சூடான விவாதத்தில் ஈடுபட்டனர்.

எங்களுக்கு பதில் தேவை. நீங்கள் எங்களிடம் பொய் சொல்ல முடியாது. ஜனாதிபதியின் செயலாளருடன் எங்களுக்கு ஒரு கலந்துரையாடல் தேவை. ஜனாதிபதி முன்னர் பேச்சுவார்த்தைகளுக்கான திகதியை உறுதியளித்திருந்தார். நிலைமை மோசமான கட்டத்தை எட்டியதால் நாங்கள் இன்று வந்துள்ளோம்," என்று முதலிகே தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பூநகரி கௌதாரிமுனை மற்றும் மன்னார் பகுதிகளில் காற்றாலை திட்டங்களை இந்தியா இழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments