அக்கரை கடற்கரையில் இளைஞனின் சடலம் மீட்பு


யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலை கரையொதுங்கியுள்ளது. 

காரணவாய் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


No comments