ஈழத்திற்கல்ல!:நல்லூர் காணிக்கே சண்டை ?



மாவீரர் தினத்தை கொண்டாட ஒற்றுமையாக வாருங்கள் இல்லையேல் எவருக்கும் நல்லூர் பகுதி நிலம் வழங்கப்படாது என யாழ்.மாநகர முதல்வர் மதிவதனி அறிவித்துள்ளார்.

யாழ். முhநகரசபையின் அமர்வில் நல்லூர் ஆலய திலீபன் தூபிப்பகுதியிலுள்ள காணி நிலத்தில் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் விவாதிக்கப்பட்டது.

அதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி கட்சிகள் நினைவேந்தலை; நடத்துவது தொடர்பில் கடும்வாதப் பிரதிவாதம் இடம்பெற்றது. 

குறிப்பாக அனைத்து தமிழ் தேசிய கட்சிகளுக்கும் நினைவேந்த உரிமை உண்டு.

அதே நேரம் வருடா வருடம் ஒரு கட்சி தரப்பினரே திலிபனின் நினைவு நாள், மாவீரர் நாள் போன்றவற்றை குத்தகைக்கு எடுத்து செய்வது போன்று அடாத்தாக முன்னெடுக்கின்றனர். இதை ஏற்க முடியாது. இந்நிலையில் ஒற்றுமை இன்மையால் தான் இரு பிரிவாக நிகழ்வுகள் இரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் கீழ்த்தரமான நிகழ்வு நடக்கின்றது.

அதன்படி நினைவேந்தல் நிகழ்வை நடத்த இரு தரப்பினரையும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து நிகழ்வை நடத்துவது யார் என்று முடிவை தெரிவிக்குமாறு கோரியிருந்தேன்.

முடிவு எட்டப்படாதமையால் காணியை இரு தரப்புக்கும் வழங்குவதில்லை என்றும் பொது இணக்கபாட்டுடன் தேசிய பரப்பில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்த முன்வந்தால் அதற்கு இடம் கொடுக்கப்படும் என்றும் யாழ்.மாநகர முதல்வரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments