யாழில். பௌத்த பிக்கு சடலமாக மீட்பு


யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பௌத்த பிக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுலே சரணஹர தேரர்  என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த பிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை சில இடங்களை சுற்றிப்பார்த்த பின்னர் நாகவிகாரைக்கு சென்று அங்கு இரவு உறக்கத்திற்கு சென்றுள்ளார்.

மறுநாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். 

No comments