பணத்தை மிச்சப்படுத்த விடுமுறை நாட்களைக் குறைக்க பிரான்ஸ் முடிவு


பிரெஞ்சு பிரதமர் பிரான்சுவா பேய்ரூ பணத்தை மிச்சப்படுத்தும் முயற்சியில் இரண்டு பொது விடுமுறை நாட்களை இரத்து செய்ய முன்மொழிந்துள்ளார்.

பட்ஜெட் இடைவெளியை நிரப்ப செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அரசாங்கம் இரண்டு பொது விடுமுறை நாட்களை இரத்து செய்ய பரிசீலித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்சில் தற்போது இரண்டு பொது விடுமுறை நாட்களான ஈஸ்டர் திங்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த ஐரோப்பாவில் நேச நாடுகள் வெற்றி பெற்ற நாளான மே 8 ஆகியவற்றை நீக்குவதே இந்த முன்மொழிவு.

இலையுதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள அடுத்த பட்ஜெட் தோற்கடிக்கப்படும் அபாயத்தில் உள்ளது.மேலும் அது நடந்தால், பிரெஞ்சு அரசாங்கம் சரிந்துவிடும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments