கிறீஸ் தீவில் காட்டுத்தீ காரணமாக மக்கள் வெளியேற்றம்


கிறீஸ் நாட்டின் மிகப்பெரிய தீவான  கிரீட்டில் வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள்நேற்று இரவு முழுவதும் இன்று வியாழக்கிழமை காலை வரை போராடினர்.

காட்டுத்தீ காரணமாக தீவின் தெற்கு கடற்கரையிலிருந்து குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டனர். 

சிலருக்கு சுவாசக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் இன்னும் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.

கிரீட் பகுதியில் உள்ள பிரபலமான ரிசார்ட்டான அக்லியா மற்றும் மூன்று குடியிருப்புகளைவிட்டு வெளியேறுமாறு  அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

தீயணைப்பு சேவையும் ஒரு சிவில் பாதுகாப்பு நிறுவனமும் வெளியேற்றங்களுக்கு உள்ளூர் மொபைல் போன் எச்சரிக்கைகளை வெளியிட்டன. மேலும் குடியிருப்பாளர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டன.

குறைந்தது 1,500 பேர் வெளியேற்றப்பட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் பலத்த காற்றினால் மலைப்பகுதி காடுகளில் மீண்டும் தீப்பிழம்புகளைப் பற்றவைத்ததாக கிறீஸ் தீயணைப்புப் படை சேவை தெரிவித்துள்ளது.

தீயை அணைக்க விமானங்களும், உலங்கு வானூர்திகளும் ஒரே இரவில் தரையிறக்கப்பட்டன. அதே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மலைகளில் தீ பரவுவனைத் தடுக்கப் போராடினர்.

வெப்பமான மற்றும் வறண்ட கோடைக்காலத்தில் கிரீஸ் நாடு அடிக்கடி காட்டுத்தீயால் பாதிக்கப்படுவது வழமை.

No comments