யாழில் பெருந்தொகை கஞ்சா மீட்டு
யாழ்ப்பாணத்தில் சுமார் 83 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் கேரளா கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, சந்தேக நபர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
அதனை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 38 பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையில் சுமார் 83 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து தப்பிசென்ற சந்தேகநபர்களை கைது செய்ய மருதங்கேணி பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment