கடந்த 6 மாதங்களில் 34 பேர் சுட்டுக்கொலை
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில் 62 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் 44 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, நேற்று மாத்திரம் நாட்டில் மூன்று துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதன்படி, கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் நேற்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அத்துடன், நீர்கொழும்பு - துன்கல்பிட்டிய பிரதேசத்தில் நேற்று பிற்பகல் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மேலும், ராகதை, படுவத்தை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்ட பாதாள உலக கும்பலின் தலைவரான “கணேமுல்ல சஞ்சீவ”வின் நெருங்கிய நண்பரான “அமி உப்புல்” என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
Post a Comment