இன்றும் 7!





செம்மணி மனித புதைகுழியில் இதுவரை மொத்தமாக 63 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று புதன்கிழமை மட்டும் 7 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அவற்றில் 54 முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி வழக்கின் இரண்டாம் கட்டத்தின் பதினான்காம்; நாளாக இன்றைய தினமான புதன்கிழமை அகழ்வுகள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்றது.

அதேவேளை மனித புதைகுழி அகழும் இடத்தில் துணிகளை ஒத்த சில பொருட்களும் இன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

செய்மதிப் படம் மூலம் அடையாளம் காணப்பட்ட பகுதியிலும் அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர்,தடயவியல் துறையினர் ,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், நல்லூர் பிரதேச சபையின் ஊழியர்கள் இணைந்து அகழ்வுப் பணியில் ஈடுபடடுள்ளனர்.

இதனிடையே புதைகுழியை சூழ உள்ள பகுதிகளில் கனரக வாகன மூலம் மேற்கொள்ளப்பட்ட துப்புரவு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.அப்பகுதிகளிலும் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமையினையடுத்தே துப்புரவு பணிகள் கைவிடப்பட்டுள்ளது.


No comments